இலங்கையில் அமைதியை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், யாழ்ப்பாணத்தில் இரண்டாவது நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட பிரிவினைவாதத்தை ஒழித்து, அமைதியை பாதுகாக்கும் வகையில் செயல்பட இந்திய ராணுவத்துக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.
கடந்த 1987ஆம் ஆண்டு முதல் 1990 வரை இலங்கையில் பணியாற்றிய இந்திய அமைதி பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், யாழ்ப்பாணத்தின் பலாலி பகுதியில் இரண்டாவது நினைவு ஸ்தூபியை இலங்கை அரசு உருவாக்கியுள்ளது.
இவ்விடத்தில், இந்தியத் துணைத் தூதர் நடராஜன் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.