செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரிட்டனைச் சேர்ந்த 17 வயது இளைஞர் இராக்கில் தற்கொலைத் தாக்குதலில்பிரிட்டனைச் சேர்ந்த 17 வயது இளைஞர் இராக்கில் தற்கொலைத் தாக்குதலில்

பிரிட்டனைச் சேர்ந்த 17 வயது இளைஞர் இராக்கில் தற்கொலைத் தாக்குதலில்பிரிட்டனைச் சேர்ந்த 17 வயது இளைஞர் இராக்கில் தற்கொலைத் தாக்குதலில்

1 minutes read

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்காக, பிரிட்டனைச் சேர்ந்த 17 வயது இளைஞர் இராக்கில் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
தல்ஹா அஸ்மல் என்ற அந்த இளைஞர், மேற்கு யார்க்ஷைர் மாகாணத்தின் டியூஸ்பரி நகரைச் சேர்ந்தவர்.
இவர்தான் ஐ.எஸ். அமைப்புகாகாக தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட மிக இளைய வயதுடைய பிரிட்டிஷார் எனக் கூறப்படுகிறது.
தல்ஹா அஸ்மல் உள்ளிட்ட நான்கு தற்கொலைப் படையினர், இராக் தலைநகர் பாக்தாதுக்கு அருகில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகே, சனிக்கிழமை தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தியதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டனர்.
இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர். இதுகுறித்து பிரிட்டனைச் சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர் காரி ஆசிம் கூறியதாவது:
இணையதளம் மூலம் இளம் சிறார்களின் மத நம்பிக்கைகளில் நஞ்சைக் கலக்கும் செயலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சராசரி இளைஞரான தல்ஹா அஸ்மல், பிரிட்டனின் மிக இளைய தற்கொலைப் படைப் பயங்கரவாதியாக மாறியது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றார் அவர்.
தல்ஹா அஸ்மலின் பெற்றோர் பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.