செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் டென்மார்க்கில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி | முதல் பெண் பிரதமர் பதவி விலகல்டென்மார்க்கில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி | முதல் பெண் பிரதமர் பதவி விலகல்

டென்மார்க்கில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி | முதல் பெண் பிரதமர் பதவி விலகல்டென்மார்க்கில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி | முதல் பெண் பிரதமர் பதவி விலகல்

1 minutes read

டென்மார்க்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் முதல் பெண் பிரதமரான ஹெல்லா தார்னிங் ஷ்மிட் சோஷல் டெமாக்ரடிக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தேர்தல் முடிவுகளை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். மேலும், அரசியிடம் சென்று அரசைக் கலைப்பதற்கான எனது முடிவைத் தெரிவிக்கவுள்ளேன்.
இனி “வென்ஸ்த்ரே’ கட்சித் தலைவர் லார்ஸ் லோகே ராஸ்மூஸன் புதிய அரசை அமைக்கும் முயற்சியைத் தொடங்கலாம் என்றார் ஹெல்லா தார்னிங்.
அவருடைய நான்கு ஆண்டுகால ஆட்சியின்போது, நாட்டின் பொருளாதாரம் ஏராளமான ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்தது. இதனால் மக்களிடையே அவருக்கு செல்வாக்கு சரிந்து வந்ததாகக் கூறப்பட்டது.
இந்தச் சூழலில், ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னரே, நாட்டின் பொருளாதாரம் சீராக இருந்த நிலையில் அவர் தேர்தல் அறிவித்தார்.
இதில் ஆளும் இடதுசாரிக் கூட்டணிக்கும், “வென்ஸ்த்ரே’ கட்சி தலைமையிலான வலதுசாரிக் கூட்டணிக்கும் இடையே நெருக்கமான போட்டி நிலவும் எனக் கூறப்பட்டது. எனினும், வலதுசாரிக் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.