பாகிஸ்தானில் கடும் வெயில் நிலவி வருகின்றது. வெயிலுக்கு இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் மட்டும் வெயிலுக்கு இதுவரை 140 பேர் பலியாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக கராச்சியில் மட்டும் 132 பேர் பலியாகியுள்ளனர்.
சனிக்கிழமை 44,8 டிகிரி அதாவது (112.64 டிகிரி செல்சியஸ்) வெயில் நிலவியது. வெப்பத்தின் சலனம் சற்று குறைந்து நேற்று 108.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது.
சிந்து மாகாணத்தின் உள் பகுதிகளான தட்டா மற்றும் தர்ப்பர்கரில் 9 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை, அம்மாகாணத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கராச்சி உள்ளிட்ட மாகாணத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என அம்மாகாண முதல் மந்திரி சையது குயாம் அலி ஷா கூறியுள்ளார்.