செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 100 மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தில் அடைக்கலம் | புருண்டிஅரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 100 மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தில் அடைக்கலம் | புருண்டி

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 100 மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தில் அடைக்கலம் | புருண்டிஅரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 100 மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தில் அடைக்கலம் | புருண்டி

1 minutes read

புருண்டியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 100 மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு கேட்டு அடைக்கலம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில் ”அடைக்கலம் கோரி வாகன நிறுத்துமிடத்தில் தங்கியிருந்த மாணவர்களில் சிலர் வெளியேற தொடங்கிவிட்டனர். தூதரகத்தில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கு அவர்கள் எவ்வித தொந்தரவும் கொடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என தெரிவித்தார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டியில், அதிபர் பியார்ரே நகுருன்ஜிசா பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் 3–வது தடவையாக அவர் போட்டியிடுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையே அதிபர் பியார்ரே நகுருன்ஜிசா, தான்சானியா நாட்டில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க சென்றார். இந்த நிலையில் அங்கு திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது.

இப்புரட்சியை அதிபர் பியார்ரேவுக்கு எதிராக செயல்படும் தளபதி கோட் பிராய்டு நியோம்பர் நடத்தினார். ஆனால் அரசு விசுவாச ராணுவ படைகள் புரட்சியை முறியடித்து விட்டது.

ஆனால் பொது மக்களும் மாணவர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதுவரை வன்முறை சம்பவங்களில் 77 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.