செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பைபிளின் முதல் ஆங்கில மொழியாக்கப் பதிப்பின் பிரதி பிரிட்டனில் ஏலம்பைபிளின் முதல் ஆங்கில மொழியாக்கப் பதிப்பின் பிரதி பிரிட்டனில் ஏலம்

பைபிளின் முதல் ஆங்கில மொழியாக்கப் பதிப்பின் பிரதி பிரிட்டனில் ஏலம்பைபிளின் முதல் ஆங்கில மொழியாக்கப் பதிப்பின் பிரதி பிரிட்டனில் ஏலம்

1 minutes read

பைபிளின் முதல் ஆங்கில மொழியாக்கப் பதிப்பின் பிரதி பிரிட்டனில் ஏலத்தில் விற்பனையாக உள்ளது.
வில்லியம் டிண்டெல் எனும் ஆங்கிலேயர், முழுமையான பைபிளை ஆங்கிலத்தில் 1526-ஆம் ஆண்டு பதிப்பித்தார்.இதன் மற்றொரு பதிப்பு 1537-இல் அச்சானது.
அந்தப் பதிப்பின் மிக அரிய பிரதி இப்போது ஏலத்தில் விற்பனையாகவுள்ளது.
அந்தப் பிரதியைத் தற்போது வைத்துள்ள நபர், கேம்ப்ரிட்ஜ் நகரிலுள்ள பழைய புத்தகங்கள் விற்பனை செய்யும் கடையில் 1967-இல் இதனை 1.25 பவுண்டுக்கு வாங்கினார்.
விரைவில் நடைபெறவுள்ள ஏலத்தில் இந்த அரிய பைபிள் பதிப்பு சுமார் ரூ. 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்தவம் குறித்து வில்லியம் டிண்டெல்லின் மாறுபட்ட கோட்பாடுகளுக்கு எழுந்த எதிர்ப்பையடுத்து, அவருக்கு 1536-இல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பைபிளை ஆங்கிலத்தில் பதிப்பித்ததன் மூலம், எளியோரும் அதனை அறிந்து கொள்ள உதவியதுடன், ஆங்கில மொழிக்குப் பெரும் வளம் சேர்த்தவர் டிண்டெல்.
ஆங்கிலத்தில் மிகப் பிரசித்தி பெற்று (தற்காலத்தில் தமிழிலும் நன்கு அறியப்பட்ட) “கேளுங்கள் தரப்படும்’, “தட்டுங்கள் திறக்கப்படும்’, “கண் இமைக்கும் நேரம்’ உள்ளிட்ட எண்ணற்ற சொற்றொடர்களையும் புதிய சொற்களையும் உருவாக்கியவர் இவர்.
“டிண்டெலும் ஷேக்ஸ்பியரும் இல்லாமல் ஆங்கிலம் இல்லை’ என்கிற பழஞ்சொல் ஆங்கிலத்தில் உண்டு!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.