ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 100 பேரை பாலஸ்தீன அரசுப் படையினர் கைது செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இதனால், இரு போட்டி பாலஸ்தீன அமைப்புகளுக்கு இடையிலான மோதல் முற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாலஸ்தீன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாலஸ்தீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரைப் பகுதியில் 100 ஹமாஸ் அமைப்பினர் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நிகழ்த்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்றார் அவர். கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சமி அபு ஜுஹ்ரி கூறியதாவது: ஹமாஸ் அமைப்பினரை பாலஸ்தீன அரசு கைது செய்திருப்பது, எங்களை சீண்டிப் பார்க்கும் செயலாகும்.
இரு பிரிவினருக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைக் குலைக்கும் வகையில் இந்தச் செயல் அமைந்துள்ளது என்றார் அவர்.
6