செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 10 மாத குழந்தை நடுக்கடலில் தத்தளித்த பொழுது காவல் படையினர் மீட்டனர்10 மாத குழந்தை நடுக்கடலில் தத்தளித்த பொழுது காவல் படையினர் மீட்டனர்

10 மாத குழந்தை நடுக்கடலில் தத்தளித்த பொழுது காவல் படையினர் மீட்டனர்10 மாத குழந்தை நடுக்கடலில் தத்தளித்த பொழுது காவல் படையினர் மீட்டனர்

0 minutes read

துருக்கியின் குகுகுயா நகரில் உள்ளது ஏஜியன் கடற்கரை.இங்கு வந்த ஒரு தம்பதி தங்களின் 10 மாத குழந்தை மெல்டாவை காற்றடைத்த விளையாட்டு பொம்மையில் அமர்த்தியுள்ளனர். சிறிது நேரத்தில் சிலு சிலுவென்ற குளிர் காற்றில் மெய்மறந்த நிலைக்கு சென்ற தம்பதி மெல்டாவை மறந்தனர்.
கவனிப்பாரற்ற அந்த பொம்மை காற்றடித்த திசையில் தன் கடற்பயணத்தை மெல்லத் துவங்கியது. ஆர்ப்பரித்த அலைகளிடையே அதில் அஞ்சாமல் அமர்ந்திருந்தாள் மெல்டா. கடலில் 1 கி.மீ., துாரத்திற்கும் மேலாக பொம்மை சென்ற போது தான் மெல்டாவின் நினைவு பெற்றோருக்கு வந்தது. நடுக்கடலில் மிதந்து கொண்டிருந்த தங்கள் குழந்தையை கண்டதும் பதறினர்.

ஆனால் காப்பாற்ற வழியின்றி கரையிலேயே தவித்தனர். தகவல் அறிந்து வந்த கடலோர காவல் படையினர் மெல்டாவை பத்திரமாக மீட்டனர்.நடந்த பயங்கரத்தை சிறிதும் அறியாத அந்த பிஞ்சுக் குழந்தை வாய் பேச வழியின்றி புன்சிரிப்பில் நன்றியை காணிக்கை ஆக்கியது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.