செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கென்னடி படால்கா விண்வெளியில் அதிகமான நாட்கள் வாழ்ந்து சாதனை படைத்திருக்கிறார்கென்னடி படால்கா விண்வெளியில் அதிகமான நாட்கள் வாழ்ந்து சாதனை படைத்திருக்கிறார்

கென்னடி படால்கா விண்வெளியில் அதிகமான நாட்கள் வாழ்ந்து சாதனை படைத்திருக்கிறார்கென்னடி படால்கா விண்வெளியில் அதிகமான நாட்கள் வாழ்ந்து சாதனை படைத்திருக்கிறார்

1 minutes read

ஒரு மனிதர் விண்வெளியில் அதிகபட்சமாக எவ்வளவு நாட்கள் இருந்திருக்கிறார் என உங்களுக்கு தெரியுமா? ரஷ்யாவைச் சேர்ந்த கென்னடி படால்கா(57) என்ற விண்வெளி வீரர்தான் இந்த புகழுக்கு சொந்தக்காரர். ஜூலை முதல் தேதி வரை 803 நாட்களை விண்வெளியில் கழித்து, உலக சாதனை படைத்துள்ள இவர் இன்னும் விண்வெளியிலேயே தங்கியிருக்கிறார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தின்(ஐ.எஸ்.எஸ்.) தலைவராக பூமியின் வட்டபாதையைச் சுற்றி வரும் பணியில் உள்ளார். மிகையல் கோர்னியன்கோ மற்றும் ஸ்காட்டி கெல்லி ஆகியோருடன் ஆய்வுப் பணிகளை செய்துவரும் கென்னடி படால்கா, தனது குழுவுடன் வரும் செப்டம்பர் மாதம் பூமிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார்.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரு மாதங்களையும் சேர்த்து கணக்கிட்டால் மொத்தம் 877 நாட்கள், அதாவது சுமார் 2.5 ஆண்டுகள் விண்வெளியில் வாழ்ந்த முதல் மனிதர் என்ற வரலாற்றுக்கு சொந்தக்காரராகவும் ஆகிவிடுவார்.

கென்னடி படால்காவுக்கு ‘ரஷ்ய கூட்டமைப்பின் நட்சத்திர நாயகன்’ என்ற விருது வழங்கி ரஷ்ய அரசு கவுரவித்துள்ளது. உடன் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பிடித்தமான இவர், முதன் முறையாக விண்வெளி செல்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பதாக எல்லோராலும் புகழப்படுகிறார்.

இவருக்கு இரினா அனடோலிவ்னா என்ற மனைவியும், யுலியா, இகடெரினா, சோன்யா என்று 3 மகள்களும் உள்ளனர். விண்வெளிக்கு போகாத நேரங்களில் பராசூட் விளையாட்டு, டைவிங் மற்றும் தியேட்டர்களில் நேரத்தை செலவிடுவார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.