செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நைஜீரியாவில் மசூதி, உணவு விடுதி ஆகிய இரு இடங்களில் குண்டு வெடிப்பு | 60 பேர் பலிநைஜீரியாவில் மசூதி, உணவு விடுதி ஆகிய இரு இடங்களில் குண்டு வெடிப்பு | 60 பேர் பலி

நைஜீரியாவில் மசூதி, உணவு விடுதி ஆகிய இரு இடங்களில் குண்டு வெடிப்பு | 60 பேர் பலிநைஜீரியாவில் மசூதி, உணவு விடுதி ஆகிய இரு இடங்களில் குண்டு வெடிப்பு | 60 பேர் பலி

1 minutes read

நைஜீரியாவில் மசூதி, உணவு விடுதி ஆகிய இரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து நைஜீரிய பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி அப்துஸ்ஸலாம் முகமது திங்கள்கிழமை கூறியதாவது:

ஜோஸ் நகரிலுள்ள யாந்தயா மசூதியிலும், உணவு விடுதி ஒன்றிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு குண்டுகள் வெடித்தன.

இதில் 60}க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காயமடைந்த 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார் அவர்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது, அந்த மசூதியில் ரமலான் சிறப்பு தொழுகைக் கூட்டம் நடந்து கொண்டிருந்ததாகவும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மதத் தலைவர் ஒருவர் அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்ததாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு வெடி குண்டு, ஷாகலிங்கு என்ற பகுதியில் உள்ள, புகழ்பெற்ற உணவு விடுதியில் வெடித்தது.

முக்கிய அரசியல் தலைவர்கள் இந்த உணவு விடுதிக்கு அடிக்கடி வந்து செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.

நைஜீரியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்குப் பகுதிக்கும், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தெற்குப் பகுதிக்கும் இடையே ஜோஸ் நகரம் அமைந்துள்ளது.

ஏற்கெனவே இங்கு போகோ ஹராம் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.