செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலவச கல்வி குழந்தைகளுக்கு வேண்டும் | மலாலாஇலவச கல்வி குழந்தைகளுக்கு வேண்டும் | மலாலா

இலவச கல்வி குழந்தைகளுக்கு வேண்டும் | மலாலாஇலவச கல்வி குழந்தைகளுக்கு வேண்டும் | மலாலா

1 minutes read

வடமேற்கு பாகிஸ்தானின், கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள, ஸ்வாத் பள்ளத்தாக்கை சேர்ந்தவர், மலாலா யூசுப்பர்ஜ், 17.

பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிக்கக்கூடாது என்ற தலிபான்கள் கட்டுப்பாட்டை மீறி, பள்ளிக்கு சென்று வந்த மலாலாவை, கடந்த 2009ம் ஆண்டு, தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், படுகாயமடைந்த மலாலாவுக்கு, லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில், உயிர் பிழைத்தார்.

இதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளின் கல்விக்காக, பாடுபடும் மலாலாவுக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில், குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியுடன், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில், நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த, ஐக்கிய நாடுகளின் கல்வி மாநாட்டில் கலந்து கொண்ட மலாலா, ‘பள்ளி கல்விக்கு ஒவ்வொரு ஆண்டும், ஏறக்குறைய 25 ஆயிரம் கோடி ரூபாய் (390 கோடி டாலர்) செலவிடப்படுவதாக, லாப நோக்கமற்ற அமைப்பு ஒன்று

தெரிவித்துள்ளது. எனவே, உலக நாடுகள், தங்கள் நாட்டு ராணுவத்தின் எட்டு நாள் செலவை குறைத்து, அந்த தொகையை உலகம் முழுவதும் உள்ள, 12 வயதுக்குட்பட்ட, அனைத்து குழந்தைகளின், கட்டணமில்லா கல்விக்கு வழங்க வேண்டும்’ என்று வேண்டு கோள் விடுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.