ஆஸ்திரேலிய பயங்கரவாத எதிர்ப்பு போலீஸ், இந்தோனேசியாவை சேர்ந்த இரண்டு விமானிகளுக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட உளவு தகவல் கசிந்ததால் மேற்குறிய தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய பயங்கரவாத எதிர்ப்பு போலீசின் தகவல் படி டாமி அபு அல்பத் மற்றும் ரித்வான் அகஸ்டின் என்ற இரண்டு விமானிகளுக்கு இணையம் வழியாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதும் விமானங்களை இயக்கிவருவதாக நம்பப்படும் இந்த இருவராலும் உலகப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன.