உகாண்டாவில் அதிபரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் இரு எதிர்க் கட்சித் தலைவர்களை அந்த நாட்டுப் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
முன்னாள் பிரதமர் அமாமா பாபாஸி, ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கம் (எஃப்டிசி) கட்சியின் தலைவர் கிஸ்ஸா பேஸிகை ஆகிய அந்த இருவரும் கைது செய்யப்பட்ட செய்தி, அரசுக்குச் சொந்தமான “நியூ விஷன்’ நாளிதழில் வெளியாகியுள்ளது.
இந்த இருவரும் உகாண்டாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் யோவேர் முஸவெனியை எதிர்த்துப் போட்டியிட திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
0