கடலில் மூழ்கி வரும், உலகின் மிகச் சிறிய நாடுகளில், நான்காவது நாடான துவாலுவை காப்பதற்கு, ஐரோப்பிய நாடுகளின் உதவியை, அந்நாட்டு பிரதமர்
ஏனேல் சோபோகா நாடியுள்ளார்.வாடிகன், மொனாக்கோ, நவ்ரு, துவாலு மற்றும் சான் மரினோ ஆகிய ஐந்து நாடுகள் தான் உலகின் மிகச் சிறிய நாடுகளாகும்.
பசிபிக் கடல் பகுதியில், ஹவாய் தீவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் உள்ள தீவுக் கூட்டங்களில், துவாலு தீவு அமைந்துள்ளது.உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக, கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், இந்த நாடு மூழ்கி வருகிறது.கடல் மட்டத்தில் இருந்து, 4 மீட்டர் உயரத்தில் உள்ள, இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை, 10 ஆயிரம் மட்டுமே.
இவர்களும், கடலில் மூழ்கும் அச்சத்தில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
”இந்த நாட்டை காப்பதன் மூலம், காலநிலை மாற்றத்தில் இருந்து, உலகை காக்கலாம். மாறாக, இந்த நாடு கடலில் மூழ்கினால், காலநிலை மாற்றத்தை தடுக்க முடியாது,” என, அந்நாட்டு பிரதமர் ஏனேல் கூறினார்.
2