4 ஆண்டுகளில் 70 அதிகாரிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளார்.
வடகொரியா அதிபராக கிம் ஜோங் உன் பதவி வகித்து வருகிறார். அவரது தந்தை கிம் ஜோங்–2 மரணத்துக்கு பிறகு கடந்த 2011–ம் ஆண்டில் புதிய அதிபராக பொறுப்பு ஏற்றார்.
அவரது தந்தை போன்றே இவரும் சர்வாதிகாரியாக திகழ்ந்து வருகிறார். தன்னை எதிர்ப்பவர்களையும், தனக்கெதிராக சதி செய்பவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கிறார்.
இவர் அதிபராக பதவி ஏற்ற 4 ஆண்டுகள் ஆகிறது. அதற்குள் 70 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்றி இருக்கிறார். பதவி ஏற்ற முதல் ஆண்டில் 10 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளார். இந்த தகவலை தென்கொரியா வெளியுறவு மந்திரி யுங் யங் செ தெரிவித்துள்ளார். இதை தென்கொரிய தேசிய உளவுத்துறையும் உறுதி செய்துள்ளது.