செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாம்புப் பிரியர் பாம்பிடம் கடிபட்டு மரணம் பாம்புப் பிரியர் பாம்பிடம் கடிபட்டு மரணம்

பாம்புப் பிரியர் பாம்பிடம் கடிபட்டு மரணம் பாம்புப் பிரியர் பாம்பிடம் கடிபட்டு மரணம்

1 minutes read

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் தலைநகரான ஆஸ்டினில் கிராண்ட் தாம்ப்சன்(18) என்பவர் செல்லப் பிராணிகள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் செல்லப் பிராணிகளாக பாம்பு மற்றும் வேறுசில பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். குறிப்பாக, பாம்புகள் மீது இவருக்கு அலாதிப் பிரியம்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் தன்னுடைய காரில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

கிராண்ட்டின் மணிக்கட்டில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் இருந்தது. அவரது பிரேதப் பரிசோதனையில் கொடுமையான விஷம் கொண்ட ராஜ நாகம் கடித்ததில் கிராண்ட் இறந்துபோனார் என தெரியவந்தது.

அந்த காரில் ஆறு பெருஞ்சிலந்திகளும், ஒரு பழுப்பு நிற பாம்பும், ஒரு தவளையும் அதே காரில் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரணமாக தனக்கு பிடித்தவற்றைப் பற்றி எல்லோரும் அவர்களது காரின் பின்பக்கம் எழுதி வைப்பர். கிராண்ட் தன்னுடைய காரில், ‘நான் பாம்புகளுக்காக காரை நிறுத்துவேன்’ என்ற ஸ்டிக்கரை ஒட்டியிருந்தார். இப்படிப்பட்ட பாம்புப் பிரியர் பாம்பிடம் கடிபட்டு இறந்தது அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.