அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காஜன் பாஸ் என்ற இடத்தில் நெருக்கடி மிகுந்த நெடுஞ்சாலையில் கடும் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து கருகின. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.பெரிய அளவிலான காட்டுத் தீயால் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலில் அவதிப்பட்டனர். பல்வேறு இணைப்புச் சாலைகள் மூடப்பட்டன. இதையடுத்து அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனினும் இதுவரை உயிரிழப்புகள் பற்றி தகவல் வெளியாகவில்லை.