செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆண்டு வருமானம் 18 சதவிகிதம் அதிகரிப்பு | இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்ஆண்டு வருமானம் 18 சதவிகிதம் அதிகரிப்பு | இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்

ஆண்டு வருமானம் 18 சதவிகிதம் அதிகரிப்பு | இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்ஆண்டு வருமானம் 18 சதவிகிதம் அதிகரிப்பு | இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்

1 minutes read

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் (86) லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். ராஜ வம்சத்திற்கு சொந்தமான எஸ்டேட்களை இங்கிலாந்து அரசு நிர்வகித்து வருகிறது.

கிரவுன் எஸ்டேட் என்றழைக்கப்படும் இந்த எஸ்டேட்டின் சொத்துகள், பரம்பரை பரம்பரையாக அரச வம்சத்தின் வாரிசுகளுக்கு சொந்தமானதாக இருக்கும். அவற்றை யாரும் விற்கவோ, வாங்கவோ முடியாது.

3 லட்சத்து 56 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் மற்றும் காடுகள் என 7.6 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துகளும், சுமார் 4 பவுண்டுகள் மதிப்புள்ள லண்டன் நகரின் முக்கிய கட்டிடங்களும் அடங்கிய கிரவுன் எஸ்டேட்டின் மொத்த மதிப்பு 12 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமானது ஆகும்.

இந்த எஸ்டேட் சொத்துகளின் மூலம் இங்கிலாந்து அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் 240 மில்லியன் பவுண்டுகள் வருமானமாக கிடைக்கிறது. இந்த வருமானத்தில் 15 சதவீதம் ஆண்டு தோறும் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.

பக்கிங்காம் அரண்மனைக்கு கடந்த ஆண்டு வருமானத்தை விட தற்போது 18 சதவிகிதம் அதிக வருமானம் கிடைத்துள்ளது. அதன்படி 16.6 மில்லியன் பவுன்ட் இங்கிலாந்து அரசால் ராணிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.