செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாகிஸ்தான் 8 நீர்மூழ்கிக் கப்பல்களை சீனாவிடமிருந்து வாங்குகிறது பாகிஸ்தான் 8 நீர்மூழ்கிக் கப்பல்களை சீனாவிடமிருந்து வாங்குகிறது

பாகிஸ்தான் 8 நீர்மூழ்கிக் கப்பல்களை சீனாவிடமிருந்து வாங்குகிறது பாகிஸ்தான் 8 நீர்மூழ்கிக் கப்பல்களை சீனாவிடமிருந்து வாங்குகிறது

1 minutes read

தனது கடற்படையின் வலிமையை அதிகரிப்பதற்காக, சீனாவிடம் இருந்து 8 நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தான் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், சீன அரசின் கப்பல் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் ஜு ஜின்கினுக்கும், பாகிஸ்தான் நிதியமைச்சர் இஸாக் தாருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது, இதுதொடர்பான ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டதாக, பாகிஸ்தான் நாளிதழான எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “தற்போது எட்டப்பட்டுள்ள ஒப்பந்தம் சீன அரசின் இறுதி பரிசீலனைக்கு உள்பட்டதாகும். இறுதி பரிசீலனைக்கு பிறகே அதிகார்வப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தொகையை, 4 கட்டங்களாக பாகிஸ்தான் செலுத்த உள்ளது’ என்றன.

“ஜு ஜின்கின் தலைமையிலான சீனக் குழுவினரின் வருகை, இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார, பாதுகாப்பு ஒத்துழைப்பு, நட்பு ஆகியவை மேலும் வலுப்படுத்தும். குறிப்பாக, பாகிஸ்தான் கடற்படை தொடர்பான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான விவகாரங்களில் இருநாடுகளும் ஒரு புரிதலை எட்டியுள்ளன’ என்று சீனக் குழுவினருடனான சந்திப்பின்போது இஸாக் தார் தெரிவித்ததாக, நிதியமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிவிக்ககையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டதில் இருந்தே, நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் தொடர்பாக செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த ஒப்பந்தமானது, 400 கோடி முதல் 500 கோடி வரையிலான அமெரிக்க டாலர்கள் மதிப்பிலானது என கூறப்படுகிறது. அதிநவீன “யுவான்’ வகை  நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தான் வாங்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அமைப்புக்காக, 6 ரோந்து படகுகளை கட்டுவதற்கான ஒப்பந்தம், சீனா, பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.