செல்போன்கள் பயன்படுத்துவதால் கான்சர் வரும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. வளர்சிதை மாற்றங்கள், புற்றுநோய் உள்பட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. செல்போன் மற்றும் அதன் கதிர்வீச்சுகளால் மனிதர்களுக்கு ஆபத்து என்று ஒரு சாராரும், இல்லை என மற்றொரு சாராரும் ஆய்வுகள் மூலம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய ஆய்வு ஒன்றில் செல்போன் பயன்படுத்துவதால் உடல் செல்களில் மாற்றம் ஏற்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
செல்போன்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. புற்றுநோய் மட்டுமின்றி வளர்சிதை மாற்றங்கள் உட்பட மேலும் பல நோய்கள் ஏற்படவும் செல்போன்கள் காரணமாக உள்ளது. மேலும், முறையற்ற வளர்ச்சிதை மாற்றங்களால் உடலில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் துகள்கள், ஆன்டி ஆக்சிடென்டுகளுடன் வினைபுரிய துவங்குவதால் சுவாச கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
செல்போனிலிருந்து வெளிவெரும் கதிர்வீச்சுக்களால் உடல் செல்களில் மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இதன் மூலம் புற்றுநோய் மட்டுமின்றி தொடர் தலைவலி, உடல்சோர்வு, தோல் வியாதிகள் போன்றவைகளும் வருகிறது.
மேலும் இந்த பாதிப்புகள் நீண்ட நாளைய பாதிப்புகளாக மாறவும் வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கின்றது. மேலும் இந்த ஆய்வில் மொபைல் போன் மட்டுமின்றி வயர்லெஸ் இன்டர்நெட் பயன்படுத்துவதாலும் புற்றுநோய் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.