செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சார்க் நாடுகளில் வறுமை ஒழிப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும்சார்க் நாடுகளில் வறுமை ஒழிப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும்

சார்க் நாடுகளில் வறுமை ஒழிப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும்சார்க் நாடுகளில் வறுமை ஒழிப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும்

1 minutes read

சார்க் நாடுகளில் வறுமை ஒழிப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியாவின் ஆதரவு தொடரும் என்று, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சுதர்சன் பகத் தெரிவித்தார்.
சார்க் நாடுகளின் வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர்களுக்கான மாநாடு பூடான் தலைநகர் திம்புவில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு சுதர்சன் பகத் பேசியதாவது:
இந்தியாவில் மோடி தலைமையிலான புதிய அரசு, வறுமை ஒழிப்பு, ஊரக மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரக வீட்டு வசதித் திட்டங்களும், சாலை, தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாத பகுதிகளுக்கு அத்தகையை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடக்கிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் கடந்த 15-ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 17 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
நேரடி மானிய முறையின் கீழ் 35 திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நேரடி மானிய முறை மூலம் கடந்த மார்ச் மாதம் வரை ரூ.46,294 கோடி வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒருங்கிணைந்து அனைவரது வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
திறன் வளர்ச்சிக்கான திட்டங்கள் மூலம், ஏழைகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சார்க் நாடுகளில் வறுமை ஒழிப்புக்கு மேற்கொள்ளப்படும் பெரு முயற்சிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் இந்தியாவின் ஆதரவும், ஒத்துழைப்பும் தொடரும்.
வறுமையைக் குறைக்க வேண்டும் என்பதைவிட அதை முற்றிலும் ஒழிக்கவே இந்தியா விரும்புகிறது. சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளுக்குப் பிறகு, பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது என்று சுதர்சன் பகத் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.