செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 3 மாதக் குழந்தைக்கு கேமராவின் பிளாஷ் ஒளியால் ஒரு கண்ணின் பார்வை பறி போயுள்ளது 3 மாதக் குழந்தைக்கு கேமராவின் பிளாஷ் ஒளியால் ஒரு கண்ணின் பார்வை பறி போயுள்ளது

3 மாதக் குழந்தைக்கு கேமராவின் பிளாஷ் ஒளியால் ஒரு கண்ணின் பார்வை பறி போயுள்ளது 3 மாதக் குழந்தைக்கு கேமராவின் பிளாஷ் ஒளியால் ஒரு கண்ணின் பார்வை பறி போயுள்ளது

1 minutes read

சீனாவின் ‘பீப்பிள்ஸ் டெய்லி’ என்ற நாளிதழ் சில தினங்களுக்கு முன், தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தி சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள செய்தியின்படி, 3 மாதக் குழந்தையை, குடும்ப நண்பர் ஒருவர் புகைப்படமெடுக்கும் போது, கேமராவின் ‘பிளாஷ்’ ஒளியை அணைக்க மறந்ததால், அளவுக்கதிகமான ஒளியின் காரணமாக அந்தக் குழந்தையின் ஒரு கண்ணின் பார்வை பறிபோயுள்ளது. அந்தக் குழந்தையிடமிருந்து ஒரு அடி தூரத்தில் கேமராவை வைத்து அவர் படமெடுத்துள்ளார்.

அப்போது அந்தக் குழந்தையின் கண்கள் திறந்திருந்ததால் கேமராவின் அதீத ஒளி அதன் ஒரு கண்ணிற்குள் ஊடுருவி அதன் கருவிழியைச் சேதப்படுத்தியிருக்கலாம் என்று இந்த செய்தியை அறிந்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, இதுவரை ‘பிளாஷ்’ போட்டு எடுத்த புகைப்படங்களால் தங்கள் குழந்தையின் கருவிழிகள் பாதிக்கப்பட்டிருக்குமோ, என்று பல பெற்றோர்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் உள்ள வில்ஸ் கண் மருத்துவமனையில் பணிபுரியும் அலெக்ஸ் என்ற மருத்துவர் இதுகுறித்து கூறுகையில், “பீப்பிள்ஸ் டெய்லியில் வந்த செய்தி அறிவுக்கு எட்டாததாக இருக்கிறது.
ஒரு வேளை அந்த செய்தி உண்மையென்றால், இந்நேரம் பல குழந்தைகளின் பார்வை பறி போயிருக்கும். கேமராவினால் அப்படி ஒரு பாதிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை. நீங்கள் விரும்பினால் பிளாஷ் போட்டு புகைப்படம் எடுக்கலாம்.” என்றார்.

இருப்பினும், குழந்தைகளைப் புகைப்படம் எடுக்கும் போது, ‘பிளாஷ்’ உபயோகிக்க வேண்டாம் என்பதே பெரும்பாலான மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.