உலகின் டாப் பில்லினியர்கள் பட்டியலில், முன்னணியில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் சக்கர் பெர்க்,(31) தான் அப்பாவாகப் போகும் சந்தோஷமான செய்தியை பேஸ்புக்கிலேயே அறிவித்துள்ளார்.
“ப்ரிசில்லாவும் நானும் உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியை சொல்லப் போகிறோம். எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது. அது பெண் குழந்தையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்று தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தோஷச் செய்தியோடு, நீண்ட காலமாக குழந்தை பெற முயற்சித்து வந்ததையும், மனைவி ப்ரசில்லாவுக்கு 3 முறைப் கருச்சிதைவு ஏற்பட்டதையும் மார்க் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக, பலரும் கருச்சிதைவு ஏற்பட்டதை, பகிர்ந்து கொள்வது கிடையாது. ஆனால் நான், பகிர்ந்து கொண்டதற்குக் காரணம், கருச்சிதைவு ஏற்பட்டதால் மனமுடைந்து இருக்கும் பெற்றோர்களுக்கு எங்களது அனுபவம் நம்பிக்கை அளிக்கும் என்ற எண்ணத்தில்தான். என்று பெற்றோர்களுக்கு உற்சாக டானிக் கொடுத்துள்ளார் மார்க்.
“அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கில் பார்த்த போது, என் மகள் தன் கையால் ‘லைக்’ சின்னத்தைக் காட்டினாள். எனவே, என் (பேஸ்புக்கின்) அடுத்த வாரிசு, அவள்தான் என்று ஏற்கனவே முடிவு செய்து விட்டேன்.” என்று பெருமை பொங்க சொல்கிறார் மார்க்.