செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் “லா ரியூனியன்’ தீவில் கண்டெடுக்கப்பட்ட விமான பாகம் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைப் போன்றது என சந்தேகம்“லா ரியூனியன்’ தீவில் கண்டெடுக்கப்பட்ட விமான பாகம் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைப் போன்றது என சந்தேகம்

“லா ரியூனியன்’ தீவில் கண்டெடுக்கப்பட்ட விமான பாகம் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைப் போன்றது என சந்தேகம்“லா ரியூனியன்’ தீவில் கண்டெடுக்கப்பட்ட விமான பாகம் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைப் போன்றது என சந்தேகம்

1 minutes read

இந்தியப் பெருங்கடலிலுள்ள “லா ரியூனியன்’ தீவில் கண்டெடுக்கப்பட்ட விமான பாகம், கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் நடுவானில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைப் போன்ற “போயிங் 777′ ரக விமானத்தினுடையது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
“ரியூனியன்’ செய்தி வலைதளத்தில் வெளியாகியுள்ள அந்தப் பாகத்தின் புகைப்படத்தில், “657பிபி’ என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து ஆய்வு செய்ததில் அது போயிங் 777 ரக விமான இறக்கை பாகத்தின் தயாரிப்புக் குறியீட்டு எண் எனத் தெரிய வந்ததாகவும் சில ஊடகங்கள் தெரிவித்தன.
எனினும், கரையொதுங்கிய பாகத்தில் “பிபி670′ என்று பொறிக்கப்பட்டுள்ளதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனமோ, போயிங் நிறுவனமோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
எனினும், ரியூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்டது போயிங் 777 ரக விமானத்தினுடையது என்பது ஏறத்தாழ உறுதியாகி விட்டதாகவும், மாயமான எம்.ஹெச்.370 விமானம் குறித்த மர்மம் விரைவில் விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் மலேசிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மலேசிய போக்குவரத்துத் துறை இணையமைச்சர் அப்துல் அஜீஸ் கப்ராவி கூறியதாவது:
ரியூனியன் தீவில் கரையொதுங்கியுள்ள பொருள், போயிங் 777 ரக விமானத்தின் பாகம் என்பது நிச்சயம். அது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்தானா என்பதை உறுதி செய்ய, எங்களது நிபுணர் குழு ரியூனியன் தீவு விரைந்துள்ளது என்றார் அவர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு மலேசியன் ஏர்லைன்ஸின் எம்.ஹெச்.370 விமானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 5 இந்தியர்கள் உள்பட 227 பயணிகள், 12 விமானப் பணியாளர்கள் இருந்தனர். புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு அறையுடன் அந்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த விமானத்தின் இருப்பிடத்தைத் தேடும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.
இந்த நிலையில், விமானம் மாயமாகி 16 மாதங்களுக்குப் பிறகு மர்ம விமான பாகம் இந்தியப் பெருங்கடலின் லா ரியூனியன் தீவில் கரையொதுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.