செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜோ பிடன் தீவிர ஆலோசனை | அமெரிக்காஅதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜோ பிடன் தீவிர ஆலோசனை

அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜோ பிடன் தீவிர ஆலோசனை | அமெரிக்காஅதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜோ பிடன் தீவிர ஆலோசனை

1 minutes read

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து துணை அதிபர் ஜோ பிடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
2009-ஆம் ஆண்டு முதல் துணை அதிபராக இருந்து வருகிறார் ஜோ பிடன் (72). அந்நாட்டில் பல துணை அதிபர்களும், தங்களது பதவிக் காலத்துக்குப் பிறகு, அதிபர் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்பதுடன், சிலர் அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
முன்னதாக, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் ஜோ பிடன் போட்டியிட மாட்டார் எனக் கூறப்பட்டு வந்தது.
ஹிலாரி கிளிண்டன் அந்தக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் தொடங்கினார். அவருக்கு கட்சியிலும் மக்களிடையேயும் குறிப்பிடத் தக்க ஆதரவு இருந்ததால், வேறு எந்த நபரும் வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் தீவிரமாக இறங்கவில்லை.
இந்த நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தனது நண்பர்கள் வட்டத்தில் ஜோ பிடன் ஆர்வம் தெரிவித்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.
இதனிடையே, புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவருடைய மூத்த மகன் இவ்வாண்டு மே மாதம் காலமானார். இதைத் தொடர்ந்து, அதிபர் தேர்தல் விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
அதே வேளையில், பல்வேறு காரணங்களால், ஹிலாரி கிளிண்டனின் வெற்றி வாய்ப்பு குறித்து ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு ஐயம் ஏற்படத் தொடங்கியது.
மேலும், கட்சியிலும் பொதுமக்களிடையேயும் நடத்திய ஓர் ஆய்வில் ஹிலாரிக்கு முன்னர் இருந்த ஆதரவு சரிந்திருப்பதும் தெரிய வந்தது.
இந்த நிலையில், ஜோ பிடனை அதிபர் வேட்பாளராக கட்சி அறிவிப்பதற்கான புதிய முயற்சியில் அவருக்கு நெருக்கமானவர்கள் இறங்கியுள்ளனர்.
தனிப்பட்ட முறையில் ஜோ பிடனின் வாய்ப்பு குறித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
தனது வாய்ப்பு குறித்து ஜோ பிடன் ஆலோசனைகள் நடத்தி வருகிறார் என்றாலும் கூட, அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வெளிப்படையாக அவர் எதுவும் கூறவில்லை.
1988, 2008-ஆம் ஆண்டுகளில், ஜனநாயகக் கட்சி சார்பில், அதிபர் வேட்பாளர் தேர்வில் அவர் போட்டியிட்டார் என்பது நினைவு கூரத் தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.