செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.நா. தகவல் | ஆப்கன் பொதுமக்கள் உயிரிழப்பு அமெரிக்கப் படை வெளியேறியதற்குப் பிறகு அதிகரித்துள்ளது ஐ.நா. தகவல் | ஆப்கன் பொதுமக்கள் உயிரிழப்பு அமெரிக்கப் படை வெளியேறியதற்குப் பிறகு அதிகரித்துள்ளது

ஐ.நா. தகவல் | ஆப்கன் பொதுமக்கள் உயிரிழப்பு அமெரிக்கப் படை வெளியேறியதற்குப் பிறகு அதிகரித்துள்ளது ஐ.நா. தகவல் | ஆப்கன் பொதுமக்கள் உயிரிழப்பு அமெரிக்கப் படை வெளியேறியதற்குப் பிறகு அதிகரித்துள்ளது

1 minutes read

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய முதல் 6 மாதங்களில், பயங்கரவாதச் செயல்களால் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆண்டு முடிவில் வெளியேறியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 1,592 பொதுமக்கள் பயங்கரவாதச் செயல்களில் உயிரிழந்தனர். 3,329 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர். கடந்த ஆண்டின் இதே மாதங்களோடு ஒப்பிடுகையில் இது ஒரு சதவீதம் அதிகம்.
பொதுமக்கள் உயிரிப்புகளில் 32 சதவீதம் ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்படும் சண்டையின்போது நிகழ்ந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக குண்டு வெடிப்புகள் (22 சதவீதம்), தற்கொலைத் தாக்குதல்கள் (21 சதவீதம்), குறிவைத்துத் தாக்குதல் (14 சதவீதம்) ஆகியவை பொதுமக்கள் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்துள்ளன. உயிரிழந்த பொதுமக்களில் 23 சதவீதத்தினர் பெண்கள்; 13 சதவீதத்தினர் குழந்தைகள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் ஐ.நா. அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதிலிருந்து, இந்த மாதத்தின் முதல் ஆறு மாதங்களில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம் எனக் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.