செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விரைவில் நேபாள அரசியல் சட்டம் நிறைவேற்ற நடவடிக்கைவிரைவில் நேபாள அரசியல் சட்டம் நிறைவேற்ற நடவடிக்கை

விரைவில் நேபாள அரசியல் சட்டம் நிறைவேற்ற நடவடிக்கைவிரைவில் நேபாள அரசியல் சட்டம் நிறைவேற்ற நடவடிக்கை

1 minutes read

நேபாளத்தின் புதிய அரசியல் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு துணைப் பிரதமர் பிரகாஷ் மான் சிங் தெரிவித்தார்.
இது குறித்து தலைநகர் காத்மாண்டில் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: அரசியல் சட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக முக்கிய அரசியல் கட்சிகளிடையே 16 அம்ச உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
எனினும் மாகாணங்களின் எல்லை மறுசீரமைப்பு, மாகாணங்களுக்கான புதிய பெயர்கள் ஆகியவற்றில் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்த விவகாரம் இறுதி செய்யும் வரை காத்திருக்க வேண்டாம் என்ற பரவலான கருத்து உள்ளது.
அரசியல் சட்ட மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லா முக்கிய அம்சங்களிலும் அனைத்துக் கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்து உருவாக வாய்ப்பில்லை என்பதால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் கருத்தை ஏற்று அரசியல் சட்ட மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போதைய மசோதா நிறைவேற்றப்பட்டு புதிய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்ததும், மாகாண எல்லை மறுசீரமைப்பு, அவற்றுக்கான பெயர்கள் குறித்து முடிவெடுக்க நாடாளுமன்றக் குழு அமைக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழு தனது பரிந்துரைகளை 6 மாதங்களுக்குள் அளிக்க வேண்டும் எனவும் யோசனை வழங்கப்பட்டுள்ளது.
பதிய அரசியல் சட்டத்தை விரைவில் நிறைவேற்றுவதன் மூலம், நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த முடியும்.
நேபாளத்தில் பெரும் அளவில் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். மின்சாரத்தின் மூலம் நாட்டின் வேளாண் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்துவதுடன், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து அன்னியச் செலாவணி ஈட்ட முடியும் என்றார்.
நாட்டின் 4 முக்கிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததுடன், அரசியல் அமைப்பு சட்டத்தின் முதல் வரைவு நேபாள நாடாளுமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.