செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இரட்டைத் தாக்குதல் சம்பவங்களில் 35 பேர் உயிரிழந்தனர். 265 பேர் காயமடைந்தனர் | ஆப்கானிஸ்தான் இரட்டைத் தாக்குதல் சம்பவங்களில் 35 பேர் உயிரிழந்தனர். 265 பேர் காயமடைந்தனர் | ஆப்கானிஸ்தான்

இரட்டைத் தாக்குதல் சம்பவங்களில் 35 பேர் உயிரிழந்தனர். 265 பேர் காயமடைந்தனர் | ஆப்கானிஸ்தான் இரட்டைத் தாக்குதல் சம்பவங்களில் 35 பேர் உயிரிழந்தனர். 265 பேர் காயமடைந்தனர் | ஆப்கானிஸ்தான்

1 minutes read

ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இரட்டைத் தாக்குதல் சம்பவங்களில் 35 பேர் உயிரிழந்தனர். 265 பேர் காயமடைந்தனர்.
ஆப்கன் தலிபான்களின் தலைவராக முல்லா அக்தர் மன்சூர் அறிவிக்கப்பட்ட பிறகு அந்த நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ள மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களாக இவை கருதப்படுகின்றன.
இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எனினும், தலிபான் அமைப்பினரே இந்தத் தாக்குதல்களையும் நிகழ்த்தியிருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
தலைநகர் காபூலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஷா ஷாஹீத் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை காலையில் வெடிபொருள் நிரப்பப்பட்ட லாரியை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர்.
இதில் 15 பேர் உயிரிழந்தனர். 240 பேர் காயமடைந்தனர்.
மற்றொரு தாக்குதல்: இதனைத்தொடர்ந்து, காபூல் நகரில் நிகழ்ந்த மற்றொரு பயங்கரவாதத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
காபூல் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள காவல்துறை அகாதெமிக்கு வெள்ளிக்கிழமை மாலை போலீஸ் உடை அணிந்து வந்த பயங்கரவாதி ஒருவர், தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்.
இந்தத் தாக்குதலில் காவலர் பணித் தேர்வுக்கு வந்திருந்த 20 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவங்களில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கு நேட்டோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.