வட கொரியாவின் உள்ளூர் நேரம் தற்போது உள்ளதைவிட அரை மணி நேரம் குறைக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஜப்பானிய காலனியாதிக்கத்தின்போது, அவர்களால் திணிக்கப்பட்ட உள்ளூர் நேரம் தற்போது திருத்தியமைக்கப்பட்டு, அதற்கு முன்னர் இருந்த நேரம் கடைப்பிடிக்கப்படுவதாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
1910 முதல் 1945-ஆம் ஆண்டு வரை கொரியாவை ஆண்ட ஜப்பான் ஆட்சியாளர்கள் கிரீன்விச் நேரத்தைவிட 8.30 மணி நேரம் கூடுதலாக இருந்த கொரிய, நேரத்தை, தங்களைப் போல் 9 மணி நேரம் கூடுதலாக மாற்றியமைத்தனர்.
0