செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் போதையில் விமானி உட்பட 4 விமானக் குழுவினர் இருந்ததால் விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது | கிரீஸ்போதையில் விமானி உட்பட 4 விமானக் குழுவினர் இருந்ததால் விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது | கிரீஸ்

போதையில் விமானி உட்பட 4 விமானக் குழுவினர் இருந்ததால் விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது | கிரீஸ்போதையில் விமானி உட்பட 4 விமானக் குழுவினர் இருந்ததால் விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது | கிரீஸ்

0 minutes read

கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்பால்டிக் நிறுவனத்தின் விமானம் நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் அந்த விமானக் குழுவினர் போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து நார்வே போலீசார் கூறியுள்ள தகவலின்படி, அந்த விமானத்தில் இருந்த 5 குழுவினர்களை  மூச்சு சோதனை (breathalyser test ) செய்து பார்த்த போது பைலட் உட்பட 4 பேரின் உடலில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஆல்கஹால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், டேக் ஆப் ஆக இருந்த அவர்களது விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவத்திற்காக ஏர்பால்டிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடன் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது. பைலட் உட்பட 4 விமான குழுவினரும் போதையில் இருந்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அனைவருக்கும் தலா 2 வருட சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.