அழகிற்கு இலக்கணமாக திகழ்ந்து கோடிக்கணக்கான மக்களை தன் வசப்படுத்தியவர் இளவரசி டயானா. இங்கிலாந்தில் கடந்த 1981ம் ஆண்டு இளவரசர் சார்லஸ் – டயானா திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர், இளவரசி டயானா தனது காதலருடன் காரில் சென்ற போது, அதை படம் பிடிக்க சில பத்திரிகையாளர்கள் இன்னொரு காரில் துரத்தினர். அப்போது டயானா சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் மரணமடைந்தார்.
மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆடை ஒன்று கடந்த 2013-ம் ஆண்டு எண்பத்தாறு லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. சென்ற வருடம் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்&டயானா திருமணத்தின் போது அளிக்கப்பட்ட ஒரு கேக் துண்டு அமெரிக்காவில் 82 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் போனது.
இந்நிலையில், டயானாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் வருகிற செப்டம்பர் மாதம் 24-ம் தேதி போச்டன் நகரில் ஏலம் விடப்படவுள்ளது. கருப்பு-வெள்ளை மற்றும் கலரில் எடுக்கப்பட்ட 14 படங்கள் இந்த ஏலத்தில் இடம்பெறுகிறது. இந்த புகைப்படங்கள் இங்கிலாந்து ராணியின் உறவினரும், உதவி புகைப்படக்காரருமான பாட்ரிக் லிச்பீல்டால் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.