25 எம்.பி.க்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதில் 196 பேர் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மீதமுள்ள 29 எம்.பி.க்கள் கட்சிகள் பெற்ற வாக்கு விகிதாச்சார அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதில், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணிக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணிக்கும் இடையே நேரடியாக கடும் போட்டி நடக்கிறது. நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்து.
தற்போது தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளிவர ஆரம்பித்துள்ளன. இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடைபெற்றத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கடைசியா கிடைத்த தகவலின் வாக்கு எண்ணிக்கையின் படி ராஜபக்ஷ அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 39.7 சதவீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணி 37.5 சதவீத வாக்குகளுடன் பின்தங்கியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. மேலும் இதுவரை வந்துள்ள முடிவுகளின் படி யாழ்ப்பாணத்தின் 11 தொகுதிகளிலும் த.தே. கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. கடைசி கட்ட நிலவரப்படி ஒட்டு மொத்தமாக நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 11.2 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.