செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாகிஸ்தான் நாட்டுக்குப் பயணம் செய்வதை தள்ளி வைக்குமாறு குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கைபாகிஸ்தான் நாட்டுக்குப் பயணம் செய்வதை தள்ளி வைக்குமாறு குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

பாகிஸ்தான் நாட்டுக்குப் பயணம் செய்வதை தள்ளி வைக்குமாறு குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கைபாகிஸ்தான் நாட்டுக்குப் பயணம் செய்வதை தள்ளி வைக்குமாறு குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

1 minutes read

பாகிஸ்தானில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதால் அந்த நாட்டுக்குப் பயணம் செய்வதை தள்ளி வைக்குமாறு தனது குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றுலா அறிவுரை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மிக மிக அவசியமான தேவை இல்லாத நிலையில், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கக் குடிமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயங்கரவாதிகளால் அமெரிக்கர்களுக்கு அந்த நாடு முழுவதும் அச்சுறுத்தல் உள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ். அமைப்புக்கு பாகிஸ்தான் தடை

இஸ்லாமாபாத், ஆக. 29: இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் சனிக்கிழமை கூறுகையில், “”பாகிஸ்தானில் ஐ.எஸ். அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ஐ.எஸ்.ஸýக்கு ஆதரவாக சுவரொட்டிகள் உள்ளிட்டவை பாகிஸ்தானின் பல இடங்களில் வெளியாகியுள்ள போதிலும், தங்கள் நாட்டில் அந்த பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருவதாகக் கூறப்படுவதை பாகிஸ்தான் மறுத்து வந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.