செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் “பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தலைமையில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்படும்” | மூத்த அரசியல் தலைவர் “பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தலைமையில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்படும்” | மூத்த அரசியல் தலைவர்

“பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தலைமையில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்படும்” | மூத்த அரசியல் தலைவர் “பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தலைமையில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்படும்” | மூத்த அரசியல் தலைவர்

1 minutes read

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தலைமையில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்படும் என்று அந்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் கூறினார்.
பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் பிரிவைத் தவிர, அந்த நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு முஸ்லிம் லீக் பிரிவுகளை ஒன்றிணைத்துப் புதிய கட்சி அமைக்கப் போவதாக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-கியூ பிரிவுத் தலைவர் செüத்ரி ஷுஜாத் ஹுசேன் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
புதிய கட்சிக்கு ஐக்கிய முஸ்லிம் லீக் எனப் பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு முக்கியத் தலைவர்களை சனிக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஐக்கிய முஸ்லிம் லீக் கட்சியைத் தொடங்குவதில் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் கொள்கைகளை ஏற்காத பலரும் புதிய கட்சியில் இணைவார்கள் என அவர் மேலும் கூறினார்.
ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்குள் புதிய கட்சி உருவாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வலுவான நிலையில் உள்ள நவாஸ் ஷெரீஃப், இம்ரான் கானின் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப் கட்சி ஆகியோரை நாடு முழுவதும் எதிர்கொள்ளும் விதத்தில் செல்வாக்குள்ள ஒரே நபர் முஷாரஃப்தான் என்ற கருத்து முஸ்லிம் லீக் பிரிவினரிடையே நிலவுகிறது.
முஸ்லிம் லீக் பிரிவுகளின் கூட்டணியைவிட, ஒருங்கிணைந்த புதிய கட்சியே வலுவானதாக இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.
2001-ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகள் பாகிஸ்தானின் அதிபராக இருந்த முஷாரஃப், நாட்டைவிட்டு வெளியேறினார். தேசத் துரோகக் குற்றம், முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ படுகொலை உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் சிக்கிய இவர், மீண்டும் அரசியல் முக்கியத்துவம் பெற்று வருவதைக் காட்டும் விதமாகப் புதிய கட்சி உதயமாகும் செய்தி வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.