செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் லாரி மோதியது 38 கன்னி பெண்கள் பலி | சுவாசிலாந்து பாரம்பரிய நடன விழா ரத்துலாரி மோதியது 38 கன்னி பெண்கள் பலி | சுவாசிலாந்து பாரம்பரிய நடன விழா ரத்து

லாரி மோதியது 38 கன்னி பெண்கள் பலி | சுவாசிலாந்து பாரம்பரிய நடன விழா ரத்துலாரி மோதியது 38 கன்னி பெண்கள் பலி | சுவாசிலாந்து பாரம்பரிய நடன விழா ரத்து

1 minutes read

ஆப்ரிகாவில் உள்ள ஒரு சிறிய நாடு சுவாசிலாந்து. அந்த நாட்டை ஆட்சி செய்பவர் மன்னர் மஸ்வதி-III.  அந்த நாட்டில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புரதாண விழா ஒன்று நடைப்பெறும். அதில் நாட்டின் அழகிய பெண்கள் கலந்துக்கொண்டு நடனம் ஆடுவார்கள். அந்த பெண்களில் ஒருவரை மன்னர் தனது புதிய மனைவியாக தேர்ந்தெடுப்பார்.

மன்னர் மஸ்வதி முன்னால் மேலாடை இன்றி 10 ஆயிரம் கன்னிப்பெண்கள் கலந்து கொள்ளும் பாரம்பரிய நடனம் விழா நடைபெறும். இதற்கான விழா இன்று நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், இந்த விழாவுக்காக. 50 சுவாசிகன்னி பெண்கள் இரண்டு லாரிகளில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அரசர் மஸ்வதி அரண்மனை உள்ள லோசிதா பகுதி மட்சபா ஹவே பாலத்தில்,வந்து கொண்டு இருந்த போது  முன்னால் சென்று கொண்டு இருந்த லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியது இதில் 38 பெண்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாரம்பரிய நடன விழா  சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவரும் நிகழ்ச்சியாகும்.

இந்த நடன நிகழ்ச்சியின் மூலம் மன்னர் தனக்கு தேவையான 15-வது மனைவியை தேர்வு செய்து கொள்வார் என கூறப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.