செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நினைவுச் சின்னமான புகழ் பெற்ற “பெல்’ கோயிலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெடி குண்டுகளை வைத்து தகர்ப்பு | சிரியாநினைவுச் சின்னமான புகழ் பெற்ற “பெல்’ கோயிலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெடி குண்டுகளை வைத்து தகர்ப்பு | சிரியா

நினைவுச் சின்னமான புகழ் பெற்ற “பெல்’ கோயிலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெடி குண்டுகளை வைத்து தகர்ப்பு | சிரியாநினைவுச் சின்னமான புகழ் பெற்ற “பெல்’ கோயிலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெடி குண்டுகளை வைத்து தகர்ப்பு | சிரியா

1 minutes read

சிரியாவின் புராதன நகரான பால்மைராவில் மேலும் ஒரு கோயிலின் ஒரு பகுதியை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் வெடி வைத்துத் தகர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நகரில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பால்ஷமின் கோயிலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெடி வைத்துத் தகர்த்ததாக கடந்த வாரம் தகவல் வெளியான நிலையில், மற்றொரு புகழ் வாய்ந்த “பெல்’ கோயிலும் அவர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தன்னார்வ அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் அப்தெல் ரஹ்மான் கூறியதாவது: பால்மைராவின் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமான, புகழ் பெற்ற “பெல்’ கோயிலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெடி குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்தனர். இதில், அந்தக் கோயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது என்றார் அவர். பால்மைராவைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் முகமது ஹஸன் அல்-ஹோம்ஸி கூறியதாவது:
பால்மைராவின் “பெல்’ கோயிலில் வெடி பொருள்கள் நிரம்பிய “பேரல்’களை வைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை வெடிக்கச் செய்தனர்.
இதனால் கோயிலில் உள்பகுதி முழுவதும் சேதமடைந்தது.
பால்மைரா நகர மக்களுக்கு “பெல்’ கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். நகரவாசிகள் இந்தக் கோயிலில் விழாக்கள் நடத்துவது வழக்கம். மேலும் அப்பகுதி புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும்.
சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள், பால்மைரா நகருக்குள் கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நுழைந்தனர்.
இந்த நிலையில், அந்த நகரின் பால்ஷமின், பெல் கோயில்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, பால்மைரா அருங்காட்சியகத்தின் முன் இருந்த புகழ்பெற்ற ஏதெனா சிங்கச் சிலையை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த ஜூன் மாதம் தகர்த்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.