செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது | அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது | அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது | அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது | அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது

1 minutes read

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாக, அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தின் நிலை குறித்து, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் செயல்பட்டு வரும் சிந்தி அறக்கட்டளை என்னும் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.
இதுதொடர்பாக “சிந்து மாகாணத்தில் அதிகரித்து வரும் மதத் தீவிரவாதம்’ என்னும் தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், பல மதரஸாக்களை ஜிகாதி அமைப்புகள் நடத்தி வருகின்றன. அந்த மாகாண உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, அங்கு சுமார் 4,021 மதரஸாக்கள் செயல்படுகின்றன.
அவற்றில், சுமார் 24 மதரஸாக்கள் மட்டுமே பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல, கராச்சி நகரிலும் ஆயிரக்கணக்கான மதரஸாக்கள் செயல்படுகின்றன.
பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் “ஜமாத் உத் தாவா’ அமைப்பு, சிந்து மாகாணத்தில் வெளிப்படையாகச் செயல்பட்டு வருகிறது. மும்பை பயங்கரவாதத் தாக்குதலை, அந்த மாகாணத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தே பயங்கரவாதிகள் கண்காணித்தனர்.
சிந்து மாகாணத்தில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் பாகிஸ்தான் அரசு எவ்வித முயற்சியைம் எடுக்கவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஐஏ தகவல்: பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்கத்-உல்-அன்ஸார் அமைப்பு, காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தின என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் 1996-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
தில்லியின் லஜபத் நகர் சந்தையில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு ஹர்கத்-உல்-அன்ஸார் அமைப்பே பொறுப்பு. அந்த அமைப்புக்கு சுமார் 60,000 அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு நிறுவனம் அளித்தது என்று சிஐஏ தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.