பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் புதன்கிழமை தீப்பற்றியதில் 2 குழந்தைகள் உள்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் விபத்தாக இருக்க முடியாது எனவும், சதி வேலை காரணமாகவே குடியிருப்பில் தீப்பற்றியதாக தாங்கள் நம்புவதாகவும் போலீஸார் கூறினர்.
உயிரிழந்தவர்களில் இருவர், தீயிலிருந்து தப்ப ஜன்னல் வழியாகக் குதித்துத் தப்பிக்க முயன்றவர்கள் என அவர்கள் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 4 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்டு காùஸனீவ் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
0