கொரியப் போர் காரணமாகப் பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைப்பதற்கான ஒப்பந்தம் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, வரும் அக்டோபர் 20-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதிவரை நடைபெறும் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் இரு நாடுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் தலா 100 பேர் பங்கேற்பர். கடந்த ஐந்து ஆண்டுகளில், பிரிந்த குடும்பத்தினரை ஒருங்கிணைக்கும் இத்தகைய நிகழ்ச்சி நடைபெறுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
2