செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சீனப்பெண் ரூ.2 கோடி மதிப்புள்ள வைரத்தை விழுங்கியதால் பரபரப்புசீனப்பெண் ரூ.2 கோடி மதிப்புள்ள வைரத்தை விழுங்கியதால் பரபரப்பு

சீனப்பெண் ரூ.2 கோடி மதிப்புள்ள வைரத்தை விழுங்கியதால் பரபரப்புசீனப்பெண் ரூ.2 கோடி மதிப்புள்ள வைரத்தை விழுங்கியதால் பரபரப்பு

1 minutes read

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் சீனப்பெண் ஒருவர் ரூ.2 கோடி மதிப்புள்ள வைரத்தை விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாங்காக் நகரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வைரங்களின் கண்காட்சியில் கலந்துகொண்ட ஜியாங் சுலியன் (39) அங்கிருந்து 6 கேரட் வைரக்கல் ஒன்றை திருடி அதற்கு மாற்றாக போலி கல் ஒன்றை வைத்துவிட்டு தனது கூட்டாளியுடன் கிளம்பினார்.

வைரம் திருட்டுபோனது தெரிந்தவுடன் அன்றிரவே போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. சி.சி.டி.வி. கேமராவில் அன்று பதிவாகியிருந்த வீடியோவைப் பார்வையிட்டபோது ஜியாங்கின் நடவடிக்கைகள் சந்தேகமளிப்பதாக இருந்ததைத் தொடர்ந்து, அவர் தொடர்பான தகவல் நகர விமான நிலைய போலீசாருக்கும், மற்ற முக்கிய பகுதிப் போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது.

ஜியாங் தனது கூட்டாளியுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில் விமான நிலையத்துக்கு வந்தபோது அங்கிருந்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

பின்னர், ஜியாங்கின் உடலை சோதனை செய்த போது வைரம் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, 12 நிமிட அறுவை சிகிச்சை செய்து அந்த வைரத்தை மீட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.