உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள யேமனில், மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா 8.9 கோடி டாலர்கள் (சுமார் ரூ.589 கோடி) நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளது.
பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள், சுத்தமான குடிநீர் ஆகியவற்றை வழங்குவதற்காகவும், பிற நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் இந்த நிதியுதவி அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உதவித் தொகையையும் சேர்த்து, செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் இந்த நிதியாண்டில் இதுவரை 17 கோடி டாலர்களை (சுமார் ரூ.1,124 கோடி) யேமன் நிவாரணப் பணிகளுக்கு அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது.
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டை காரணமாக, 1.3 கோடி பேர் கடும் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
1