சோமாலியா நாட்டின் மொகதிசு நகரில் அந்நாட்டு குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கான அலுவலகங்கள் அமைந்திருக்கும் ஜனாதிபதி மாளிகை உள்ளது.
பலத்த பாதுகாப்பு உள்ள இந்த கட்டிடத்தின் வளாகத்திற்குள் நேற்று தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளே இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.