ஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவர் அதிவேகமாக ஓடி புதன்கிழமை உலக சாதனை படைத்தார்.
100 மீட்டர்களை 42.22 விநாடிகளில் ஓடிக் கடந்த அவர், 105 வயதுடையவர்களுக்கான பிரிவில் உலகின் மிக வேகமான ஓட்டப் பந்தய வீரர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார்.
ஓட்டப் பந்தயத்தில் 105 வயதுடையவர்களுக்கான பிரிவையே இவர்தான் ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை வயதில் அவர் இவ்வளவு வேகத்தில் ஓடியிருப்பது மருத்துவ உலகில் ஒரு விந்தை எனக் கூறப்படுகிறது.
எனினும், தனது வேகத்தில் தனக்கு திருப்தி இல்லை என்று கூறியுள்ள மியாஸாகி, கூடுதலாகப் பயிற்சி மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “”உலகின் மிக வேகமான ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட்டுடன் போட்டியிடுவதே எனது லட்சியம்” என்றார் அவர்.
ஏற்கெனவே, 100 வயது நிரம்பியவர்களுக்கான 100 மீட்டர் போட்டியில் 29.83 விநாடிகளில் கடந்த இவர் படைத்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
4