நேபாளத்தில் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் புதிய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து, அக்டோபர் 2-ம் தேதி பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குளிர்கால கூட்டத்தொடரை நடத்த அதிபர் ராம் பரண் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் சுஷில் கொய்ராலா பங்கேற்பதை அனுமதிப்பதற்காக பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும், உள்நாட்டு அரசியல் சூழ்நிலை காரணமாக கொய்ராலா தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார்.