நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி, அந்நாட்டின் அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
நேபாளத்தில் பழைய அரசியலமைப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தற்கால அரசியல் நடைமுறைகளுக்கு ஏற்ப புதிய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
அந்நாட்டு விதிமுறைபடி, புதிய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் முதல்முறையாக நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் 7 நாள்களுக்குள்ளாக அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதுகுறித்து நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா கூறுகையில், “அடுத்த பிரதமரைத் தேர்வு செய்வதற்கான சட்ட நடைமுறைகளை உடனடியாக தொடங்குமாறு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவேன்’ என்றார்.
2