பிரிட்டனில் பயங்கரவாத சதிச் செயலில் ஈடுபட்டதாக 15 வயது சிறுவனுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
தண்டனை பெற்றுள்ள அந்த சிறுவன்தான், பிரிட்டனில் பயங்கரவாதக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட மிக இளைய வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் காவல்துறையினரின் தலையைத் துண்டித்துப் படுகொலை செய்ய திட்டமிட்டதாக நடைபெற்ற வழக்கில், குற்றத்தை ஒப்புக் கொண்டு வாதாடிய அந்தச் சிறுவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரால் பிறருக்கு ஆபத்து இல்லை என்பது உறுதியாகும் வரை அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
0