செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பழைய ஜெருசலேம் நகருக்குள் நுழைவதற்கு இஸ்ரேல் நேற்று அதிரடி தடை விதித்ததுபழைய ஜெருசலேம் நகருக்குள் நுழைவதற்கு இஸ்ரேல் நேற்று அதிரடி தடை விதித்தது

பழைய ஜெருசலேம் நகருக்குள் நுழைவதற்கு இஸ்ரேல் நேற்று அதிரடி தடை விதித்ததுபழைய ஜெருசலேம் நகருக்குள் நுழைவதற்கு இஸ்ரேல் நேற்று அதிரடி தடை விதித்தது

1 minutes read

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு உருவாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் மேற்கு  கரை நகரில் இஸ்ரேல் தம்பதியர் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் ராணுவம், பழிவாங்குவோம் என எச்சரித்தது.

இந்த நிலையில், பழைய ஜெருசலேம் நகரில் நேற்று முன்தினம் இரவு, பாலஸ்தீன போராளி ஒருவர் துப்பாக்கி, கத்தி தாக்குதல்கள்  நடத்தி, 2 இஸ்ரேலர்களை கொலை செய்தார். ஒரு பெண்ணையும், ஒரு குழந்தையையும் காயம் அடையச்செய்தார்.

மற்றொரு சம்பவத்தில், மேற்கு ஜெருசலேமில் சாலையில் நடந்து சென்ற ஒருவரை பாலஸ்தீனர் ஒருவர் கத்தியால் குத்தி கொன்றார்.  அவரை சம்பவ இடத்திலேயே போலீசார் சுட்டுக்கொன்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஜெருசலேம் பழைய நகரில், பாலஸ்தீனர்கள் 2 நாட்கள் நுழைவதற்கு இஸ்ரேல் நேற்று அதிரடி தடை விதித்தது.  பழைய ஜெருசலேம் நகருக்குள் இஸ்ரேலர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள், உள்ளூர் மக்கள், தொழில் அதிபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

அல் அக்சா மசூதிக்குள் 50 வயதைக்கடந்தவர்கள் மட்டுமே சென்று தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.