காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்தப் பகுதியில் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ஏவுகணை வீசப்பட்டது.
அது வெட்டவெளியில் விழுந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, காஸா பகுதியிலுள்ள ஹமாஸ் பயங்கரவாத இலக்குகள் மீது இஸ்ரேலியப் போர் விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குண்டு வீசித் தாக்கியது.
இந்த ஆண்டு மட்டும் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது இதுவரை 16 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காஸாவில் இஸ்ரேல் நிகழ்த்திய விமானத் தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
0