ஒரே நேரத்தில் பல நகரங்களை அழிக்கும் வல்லமை கொண்ட அணு ஆயுதங்களை, கடத்தல்காரர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினருக்கு விற்க நடந்த முயற்சிகளை முறியடித்துள்ளோம் என்ற அதிர்ச்சி தகவலை எப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் பழைய உளவு அமைப்புகளுடன் தொடர்புடைய சில கடத்தல் கும்பல்கள், பேரழிவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு செசீயம் என்ற அணு ஆயுத பொருட்களை கடத்தல்காரர்கள் விற்க முயன்றது தெரிய வந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அணு ஆயுதங்களை விற்க எடுக்கப்பட்ட 4 முயற்சிகளை தடுத்துள்ளதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவு தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களின் கள்ளச் சந்தையாக இருக்கும் மல்டோவாவில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரஷ்யாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவு சரியாக இல்லாத நிலையில் அணு பொருட்கள் பெருமளவு கடத்தல் கும்பல்களின் கையில் உள்ளது.