இலங்கையில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் ரயில் நிலையங்களிலும், ரயிலிலும் பிச்சை எடுக்கவும், பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுவதாக ரயில்வே துறை பேச்சாளர் அறிவித்துள்ளார்.
ரயிலில் பிச்சை எடுக்கும் நபர்களால் தொற்று நோய்கள் பரவுவதாகவும், பயணிகளுக்கு பிச்சைக்காரர்கள் தொல்லை கொடுப்பதால், அவர்களது மன நலம் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்துக்குள்ளேயே இவர்கள் நுழைய முடியாத அளவுக்கு தடுக்கப்படுவார்கள் என்றும், ரயில் நிலைய அதிகாரிகள், பொறியாளர்கள், ரயில் ஓட்டுநர்கள், பாதுகாவலர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஒத்துழைத்தால் இந்த முறை வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.